பாடசாலை கீதம்
அல்லாஹ் உன்னிடம் அருள் தேடிப் பாடினோம் எல்லாப் பேறும் பெற்றுயர
என்றும் வேண்டினோம் - ( அல்லாஹ் )
அழகுறு மலைத்தொடர்களும்
பயனுறு நல் மரங்களும் வளமுறு சீர் கங்கையும்
நிறைந்திடும் எம் ஊரிதாம்
நாடி உன்னை வேண்டுகின்றோம் நாயனே நல் அருள் புரி ( அல்லாஹ் )
அறநெறி நல்லொழுக்கமும்
அறிவுடன் பல்கலைகளும் அளித்திடும் ஆசான்களை
அனைவரும் அடி பணிந்திட
நாடி உன்னை வேண்டுகின்றோம் நாயனே நல் அருள் புரி ( அல்லாஹ்)
அல் மஹ்மூத் வளரவே பல் கலையிலும் அது உயரவே தாய்மொழி தமிழ் வாழ்கவே
ஸ்ரீலங்கா சீர் பெருகவே
நாடி உன்னை வேண்டுகின்றோம் நாயனே நல் அருள் புரி ( அல்லாஹ் )
இயற்றியவர் : ஏ.ஏ.எம்.பஷீர்
மல்வானை இசையமைத்தவர் : ஜனாப் என். எம். நஜ்முதீன்






